“பங்களாதேஷ் மக்கள் மிகவும் நன்றிகெட்டவர்கள்” என்று ஷேக் ஹசீனா மகன் சஜீப் வாசித் கூறியுள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் ஏற்பட்ட இடஒதுக்கீடு போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டமாக மாறி வன்முறை தலைவிரித்தாடியது.
இந்த வன்முறையில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார் ஷேக் ஹசீனா.
ராணுவம் ஆட்சி அமைக்க முன்வந்துள்ள நிலையில் வேறு அரசியல் கட்சி தலைவர்களை ஆட்சியில் அமர்த்துவது குறித்தும் பேசப்பட்டு வருகிறது.
நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அவர் லண்டன் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஷேக் ஹசீனா மகன் சஜீப் வாசித் “முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஷேக் ஹசீனா ஆகியோர் இந்நாட்டை கட்டமைக்க செய்த தியாகங்களை மறந்து பாகிஸ்தான் நிலைக்கு நாட்டை சீர்குலைத்துள்ளனர்.
பங்களாதேஷ் மக்கள் நன்றி கெட்டவர்கள் இவர்களுக்காக இனி தனது தாய் ஷேக் ஹசீனா மட்டுமன்றி தானும் அரசியலில் ஈடுபடபோவதில்லை” என்று தெரிவித்துள்ளார்