பல்கலைக்கழகத்தில் Ph.D. படித்துக்கொண்டே ரோட்டில் தள்ளுவண்டி கடைவைத்து சுயதொழில் செய்து வரும் தமிழ்நாட்டு மாணவரைப் பார்த்து வெளிநாட்டைச் சேர்த்தவர் வியந்து பாராட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும் அதேவேளையில் தங்கள் படிப்புச் செலவுக்குத் தேவைக்கான பணத்தையும் ஈட்டுவதிலும் திறன் படைத்தவர்களாக உள்ளனர்.

வெளிநாட்டில் உயர்கல்வி பயில்வதற்காக செல்லும் மாணவர்கள் உணவகங்களில் வேலை செய்து தங்கும் செலவு மற்றும் உணவுக்கான பணத்தை தேடிக்கொள்ளலாம் என்று வெளிநாட்டு பல்கலைக்கழக முகவர்கள் இங்குள்ள மாணவர்களின் ஆசையை தூண்டி வரும் வேலையில் சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இங்கேயே தனக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பது வெளிநாட்டினரையும் வியக்க வைத்துள்ளது.

வெளிநாட்டைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் சென்னையில் தள்ளுவண்டிக் கடைகளில் உள்ள உணவு வகைகளை ருசிபார்க்க சென்றார்.

அப்போது ஒரு கடையில் சிக்கன் பக்கோடா விற்றுக்கொண்டிருந்த இளைஞரிடம் பேச்சுக்கொடுத்த அவர் அந்த இளைஞர் Ph.D. படித்து வருவதாகவும் தனது ஆய்வுக் கட்டுரைகளை இணையத்தில் தேடி தன்னைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறியதைக் கேட்டு அந்த வெளிநாட்டவர் வாயைப் பிளந்தார்.

https://x.com/haraappan/status/1820309578757591336

Ph.D. படித்துக்கொண்டே சுயதொழில் செய்து வரும் இந்த மாணவர் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி உள்ளது.