100 முதல் 200 கி.மீ. தூரத்தில் ஒரே ரயில்வே மண்டலத்தில் உள்ள நகரங்களை இணைக்க ‘வந்தே மெட்ரோ’ ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவா நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இந்த மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர் இதனால் விரைவான ரயில் போக்குவரத்து ஏற்படும் என்று கூறினார்.

சென்னை கடற்கரை மற்றும் காட்பாடி இடையிலான வந்தே மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டம் நாளை நடைபெற உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ள நிலையில் இந்த புதிய ரயில் போக்குவரத்து திட்டம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://x.com/DrmChennai/status/1818987927357333573

இதனால் சென்னையில் இருந்து வேலூருக்கு ஒன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும் என்று கூறப்படும் நிலையில் இதற்கான கட்டணம் குறித்த விவரங்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.