சென்னை:  கடந்த அதிமுக ஆட்சியின்போது, தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருளை சட்டப்பேரவைக்குள்  அப்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்சகள்   எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை  உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் உரிமை குழு அனுப்பிய நோட்டீஸ் செல்லும் என்று கூறியுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட 17 தி.மு.க.., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.
அதிமுக ஆட்சியில் குட்கா விற்பனை நடைபெறுவதை சுட்டிக்காட்டுவதற்கு, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்குள் குட்கா பொருட்களை எடுத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து, இதுகுறித்து விளக்கம் அளிக்க சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டிஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, உரிமை குழு நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டது. தற்போது அதன் மேல்முறையீடு வழக்கில்,   தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்துள்ளதுடன், இதுகுறித்த  மீண்டும் சபாநாயகர் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு அளித்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஜூலை 29ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்றைய தினத்திற்கு( ஜூலை 31) தீர்ப்பு வழங்குவதாக கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். அதன்படி, நீதிபதிகள் இன்று, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், உரிமை மீறல் நோட்டீசுக்கு முதல்வர் உள்ளிட்ட 17 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.