கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி கோவையில் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை கொளத்தூரில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலருக்கு உதவிகள் வழங்கியதுடன், பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாவியர்களை வாழ்த்தி பரிசு வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”கொளத்தூர் தொகுதிக்கு வரும்போது என்னையே அறியாமல் புதிய உற்சாகம் பிறக்கிறது. முடிந்த அளவுக்கு 10 நாளுக்கு ஒருமுறையோ வாரத்துக்கு ஒரு முறையோ கொளத்தூருக்கு வருகிறேன். நமது பணிகளால் கொளத்தூர் தொகுதியாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். கொளத்தூரில் புதிய சார்-பதிவாளர் அலுவலகம், காவல்துறை துணை ஆணையர் அலுவலகம், புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைய உள்ளன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டங்களை கொண்டு வாருங்கள். ஆளுங்கட்சி மட்டுமில்லாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தொகுதிக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே தொகுதிக்கு 10 திட்டங்களை செயல்படுத்துகிறோம். விருப்பு வெறுப்பு இன்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொகுதிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் இந்துசமய அறநிலையத்துறை சிறந்து விளங்கி வருகிறது.
அறநிலையத்துறை அறிவுத் துறையாகவும் செயல்படுகிறது. 3ஆண்டு திமுக ஆட்சியில் அறநிலையத்துறையில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அறநிலையத்துறை சார்பில் செயல்படும் கல்லூரிகளில் இலவச கல்வி தரப்படுகிறது.
1400 கோயில்களில் குடமுழுக்கு நடத்தியுள்ளோம். கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கியுள்ளோம். இறை பணியோடு சேர்த்து கல்விப்பணியும் செய்து வருகிறோம். ரூ.5,000 கோடியிலான கோயில் சொத்துகளை மீட்டு இருக்கிறோம்.
சாதி, மதம் என்று எதுவுமே மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது. கல்விதான் உங்களிடம் இருந்து யாரும் திருட முடியாத சொத்து.
கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி கோவையில் தொடங்கப்படும்.
புதிய கண்டுபிடிப்பு, பேச்சுத் திறன், எழுத்துத் திறனை மாரைவாகள் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை மறுகொள்ள வேண்டும்,
இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.