சென்னை:  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு சட்ட  அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கடந்த இரு நாட்களில் மூன்று கொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், அமைச்சர் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என கூறியிருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

கொலை போன்ற  சம்பவங்கள் எண்ணிக்கை , கூடும், குறையும். இதற்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது. அதற்கு நாங்கள் பொறுப்பாக இருந்தால், எங்கள் மீது குற்றம் சாட்டலாம். யார் யாருக்கு முன் விரோதம் உள்ளது என்று கண்டுபிடித்து கொண்டிருக்கிறோம் என பொறுப்பின்றி அமைச்சர் கூறியுள்ளார். 

திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை தடுக்க வேண்டிய காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. காரணம், சட்ட விரோத செயல்களை அரசியல் கட்சியினரே அரங்கேற்றி வருவதால், காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே, சென்னையின் முக்கிய பகுதியில் பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஒரு கும்பலாம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் திமுக அரசு மீதான நம்பகத்தன்மை மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இது தமிழ்நாடு அல்லது கொலைநாடா என்றும், தமிழ்நாடு கொலை களமாக மாறி உள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.   நடப்பாண்டு,  கடந்த 6 மாதங்களில் (ஜனவரி முதல் ஜுன் வரை), 595 கொலைகள் நடைபெற்றுள்ளது என்றும்,  தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை!’ அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது” என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார்.  அதுபோல,  தமிழ்நாட்டில் கடந்த  ஒரு மாதத்தில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன என்று நாம் தமிழ்ர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், சீமான் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த , இரு நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் பல்வேறு கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடலூர் பகுதியில் அதிமுக வார்டு செயலாளர் பத்மநாபன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். அதுபோல, சென்னையில் மூதாட்டி ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கூவம் ஆற்றில் வீசப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி,  சிவகங்கையில் பாஜக நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.  இதனால் மாநில முதல்வர் பதவியில் இருந்து ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரியிருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என    தெரிவித்துள்ளார். “இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த அமைதிப் பூங்கா, சட்டம் ஒழுங்கில் இந்தியாவிலேயே தமிழகம் சிறப்பாக விளங்குகிறது,  என பழைய பாட்டையே தற்போதும் கூறி உள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் நடைபெற்றும், வன்முறை சம்பவங்களுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை, குற்றச் சம்பவங்களுக்கும் முன்விரோதமே காரணம்” எனவும்  அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ‘தமிழகம் கொலை மாநிலமாக மாறி விட்டது’ என, புதிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தமிழகம் கொலை மாநிலம் அல்ல. கலை மற்றும் அறிவு சார் மாநிலம். சமூக விரோதிகளை களை எடுக்கின்ற மாநிலம். அவரது ஆட்சியில் நடந்த சம்பவங்கள், ஆட்சியோடு தொடர்புடையவை. தி.மு.க., ஆட்சியில் எந்த வன்முறை சம்பவங்களும், ஆட்சியோடு தொடர்புடையவை அல்ல.

கோடநாடு பங்களா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாக இருந்தது. அங்கு தொடர் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. அது முந்தைய ஆட்சியாளர்களின் திறமையின்மையை காட்டுவதாக அமைந்தது.

தமிழகத்தில் ஐந்து சம்பவங்களை, பழனிசாமி கூறியுள்ளார். அதில், ஒன்று புதுச்சேரியில் நடந்தது. மீதமுள்ள நான்கு சம்பவங்கள் அரசியல் தொடர்புடையவை அல்ல. சொந்த காரணங்களுக்காக அல்லது முன் விரோத அடிப்படையில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன.

சட்டம் – ஒழுங்கு சீர்கெடும் அளவுக்கு எந்த சம்பவமும் கிடையாது. கருணாநிதியை நான்கு கோடி மக்களுக்கு தலைவர் என்போம். தற்போது, ஸ்டாலின் எட்டு கோடி மக்களுக்கு தலைவராக உள்ளார். மக்கள் தொகை பல மடங்கு உயர்ந்து உள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் எண்ணிக்கையும், கூடும், குறையும். இதற்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது. அதற்கு நாங்கள் பொறுப்பாக இருந்தால், எங்கள் மீது குற்றம் சாட்டலாம். யார் யாருக்கு முன் விரோதம் உள்ளது என்று கண்டுபிடித்து கொண்டிருக்கிறோம்.

அமைச்சரின் விளக்கம், ஒரு மாநிலஅமைச்சர் என்ற பொறுப்புணர்வு இல்லாமல், முன்விரோதம் என்று கூறுவது, அவரது இயலாமையை காட்டுவதாகவும், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருப்பதாகவும், பொதுமக்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை  நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

“இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா…?! திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு! பிரேமலதா விஜயகாந்த்