பெங்களூரு

த்திய அமைச்சர் குமாரசாமிக்கு செய்தியாளர் சந்திப்பின் போது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

நேற்று பெங்களுருவில் நடைபெற்ற பாஜக – மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பெங்களூரு முதல் மைசூரு வரை பாத யாத்திரை நடத்தவும், சமீபத்திய ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது

பிறகு கோல்ட் ஃபிஞ்ச் ஹோட்டலில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்தார். குமாரசாமி பாஜக – மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து நடத்தும் பாதயாத்திரை குறித்து பேசிக்கொண்டிருந்த அவர் மூக்கில் இருந்து திடீரென ரத்தம் வழிந்தது.

அவர், உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஏற்கனவே அவர் பக்கவாத பிரச்னைக்கு மாத்திரை எடுத்துவரும் நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதிக உடல் உஷ்ணத்தின் காரணமாக மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததாக மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.