மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார்.
கூட்டத்தில் தனக்கு பேச சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்களுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்படுவதாவும், நிதி ஆயோக் அமைப்பு பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக மம்தா குற்றம் சாட்டினார்.
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு எந்தவித சிறப்பு திட்டங்களோ, வளர்ச்சித் திட்டங்களோ மற்றும் திட்டங்களுக்கு உரிய நிதியையோ மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் மத்திய மோடி அரசு மீது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார்.
மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடந்து வரும் இந்த கூட்டத்தில் இருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாதியிலேயே வெளியேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.