2024 ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் நாளை (ஜூலை 26) கோலாகலமாக துவங்குகிறது.
இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இதில் வில்வித்தை பிரிவில் இந்திய மகளிர் அணி தரவரிசைப் பட்டியலில் நான்காவது இடம் பிடித்துள்ளது. இதன்மூலம் நேரடியாக காலிறுதிச் சுற்றுக்கு நுழைந்துள்ளது.
இந்திய அணியின் தீபிகா குமாரி, அங்கிதா பகத், பஜன் கவுர் ஆகியோர் சிறப்பாக விளையாடி 1983 புள்ளிகள் பெற்றனர்.
இந்த பட்டியலில் 2046 புள்ளிகளுடன் கொரியா முதல் இடத்திலும், 1996 புள்ளிகளுடன் சீனா இரண்டாவது இடத்திலும் 1986 புள்ளிகளுடன் மெக்ஸிகோ மூன்றாவது இடத்திலும் உள்ளது.
நாளை துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.