சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்  ’ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆற்காடு சுரேஷ் காரணமில்லை, ஆனால், மாநகர காவல்துறை ஆணையர் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான வழக்கறிஞர் ஆனந்தன்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞராக இருக்கும் பி.ஆனந்தன் என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆற்காடு சுரேஷுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், பார் கவுன்சில் தேர்தல் முன்விரோதம் கொலைக்கு காரணமா என்ற சந்தேகம் இருப்ப தாக பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் அவரது வீடு அருகே ஒரு கும்பலால் ஜூலை 5ந்தேதி மாலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. . ஆம்ஸ்ட்ராங்கை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருவேவேங்கடம் என்பவரை காவல்துறை என்கவுண்டர் செய்தது. இது சர்ச்சையானது. அதுபோல, இந்த படுகொலைக்கு ஆற்காடு சுரேஷ்  தம்பிதான் காரணம் என மாநர காவல்ஆணையர் கூறியிருந்தார். இதுவும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. விசாரணை நடத்துவதற்கு முன்பே, இவர்தான் காரணம் என எப்படி கூறமுடியும் என கேள்வி எழுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு பிஎஸ்பி கட்சிக்கு அடுத்த மாநில தலைவர் யார் என்ற கேள்விகளும் எழுந்தன. ஆம்ஸ்ட்ராங் கொலையால் வெகுண்டெழுந்த திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், இந்த படுகொலையை கண்டித்து பிரமாண்டமான பேரணியையும் நடத்தினார். இதனால், அவர் மாநில தலைவராக பொறுப்பேற்பார் என  ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன.

இந்த நிலையில்,  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்  யார் என்பத குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்டுள்ள  அறிக்கையில், மாயாவதி மற்றும் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர்கள் அசோக்சித்தார்த் மற்றும் கோபிநாத் ஆகியோரின் ஆலோசனையில் கட்சியின் மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி நியமிக்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ள வழக்கறிஞர் ஆனந்தன்  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பகுஜன் சமாஜ் கட்சியில் பதவி என்பது கிடையாது. மிகப்பெரிய பொறுப்பு. மறைந்த தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் இந்த இயக்கத்தை முன்னெடுக்க அவரின் ரத்தத்தை சிந்தி இருக்கின்றார். இது ஒரு ’தலித் இயக்கம்’ என்று மீடியாக்கள் வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இது அனைத்து மக்களுக்கான கட்சி. அண்ணன் விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து எடுத்து செல்வோம்.

பகுஜன் சமாஜ் கட்சி கொள்கை என்பது அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து வெகுஜன இயக்கமாக எடுத்து செல்வோம். ஆம்ஸ்ட்ராங் அண்ணன் நடத்தும் நிகழ்ச்சிக்கு ஒரு லட்சம் பேர் வரை வருவார்கள். ஆனால் வாக்குகளை வெவ்வேறு கட்சிகளுக்கு செலுத்துவார்கள் என்றவர்,  அண்ணன் கொலைக்கு  மூளையாக ஒருவர் செயல்பட்டு உள்ளார்.

நான் 25 ஆண்டுகளாக வழக்கறிஞராக உள்ளேன்.  அண்ணன் படுகொலை குறித்து  காவல்துறை விசாரணையை தொடங்கி உள்ளனர். ஒரு கொலை வழக்கு நடந்தால், அப்பகுதியில் உள்ள முக்கிய வழக்கறிஞர்களிடம் பேசி குற்றவாளிகளை ஒப்படைக்க சொல்வார்கள். இப்படி கேட்பது கொலை செய்பவர்களை ஊக்குவிப்பதாக அமையும்.  முன்பு ஒரு கொலை நடந்தால், வீட்டை சுற்றி விசாரணை நடக்கும். ஆனால் பழைய காவல்துறையின் செயல்பாடுகள் இப்போது குறைவாக உள்ளது.

இந்த வழக்கில், ஆரம்ப கட்டத்தில் போலீஸ் உள்ளது. அனைவருக்குமான இருந்த தலைவரை மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து, அவரது புகழ் பிடிக்காமல், பொறாமையால் இந்த கொலையை செய்து உள்ளனர். இதற்கு மூளையாக ஒருவர் செயல்பட்டு உள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்க்கை கொன்றதாக சொல்லப்படும் ஜெயபால் என்பவர், 9 மாதமாக அண்ணனை சந்தித்தும் இல்லை, தொலைபேசியில் பேசியதும் இல்லை. ஆற்காடு சுரேஷ் கொலைக்கும், பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால்,  ஆற்காடு சுரேஷ் என்பவரின் கொலைக்கு எதிராக இந்த கொலை நடந்ததாக காவல்துறை கமிஷனர் பேட்டி கொடுத்துள்ளார் இது தவறானது.  . ஆற்காடு சுரேஷ் என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தவர். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் உடன் அவருக்கு விரோதம் கிடையாது என தெளிவுபடுத்தினார்.

நக்கீரன் பிரகாஷ் என்பவர் சிறுவயதில் இருந்து ஆம்ஸ்ட்ராங் உடன் பழகியதாக தவறான செய்திகளை கூறுகின்றார். உண்மை தகவல்களை தெரியாமல் சொல்கிறார். ரவுடி பின்புலம் என்று சொன்னால், அவருடைய கொலை நியாமானது ஆகிவிடும் என சித்தரிக்க முயற்சிக்கின்றனர் என சாடியவர்,  பிரபல எம்.எல்.ஏவின் நண்பராக ஆம்ஸ்ட்ராங் இருந்த காரணத்தால் அதிமுக அரசு அவர் மீது 6 வழக்குகளை போட்டனர்.  ஆனால்,  நீதிமன்றம் வழக்கு போட்ட அதிகாரிகள் மீதே வழக்கு போட சொல்லி உத்தரவிட்டு உள்ளது என்றவர்,  அந்த வழக்குகளில்  ஆம்ஸ்ட்ராங் அவர்கள் குற்றமற்றவர் என்பது நிரூபணமாகி உள்ளது. அதற்கான   சான்று வழங்கி அவருக்கு துப்பாக்கி லைசன்ஸை காவல் துறை தந்து உள்ளது என்றார்.

மேலும்,  பார் கவுன்சில் தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழலில், அண்ணன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை உருவாக்கி உள்ளார்கள். அண்ணன் ஆதரிக்கும் நபர்களுக்கு அவர்கள் வாக்களிப்பதால் அவர் வெற்றி பெறுகின்றார். இதனால் பார்கவுன்சில் தேர்தலில் தோற்றவர்களின் சதி இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. புத்தர், அம்பேத்கரின் கொள்கையே அண்ணன் ஆம்ஸ்ராங்கின் கொள்கை, யாரையும் பழிக்கு, பழிவாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இதில் தொடர்பு உடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தூக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

இவ்வாறு கூறினார்.