சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில், நடைபெறும் நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்போது பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூலை 27ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக்கின் ஒன்பதாவது ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
லோக்சபா தேர்தல் காரணமாக இந்த ஆண்டு இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பா . பிப்ரவரி 1, 2024 அன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் மோடி பிரதமராக பதவி ஏற்ற நிலையில், நிதிய அமைச்சராக நிர்மலா சீத்தாராமனே நியமிக்கப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து, 2024-25க்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 23ந்தேதி கூட உள்ளது. அன்றைய தினம் பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லியில் வரும் 27ந்தேதி நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கலந்துகொள்ள மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதையேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் 27ம் தேதி டெல்லி செல்கிறார் . அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்றப்பின் முதல் முறையாக ஸ்டாலின் அவரை சந்திக்க உள்ளார்.