சென்னை: 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்ய பள்ளி கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கல்வித்துறைக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய தகுதி தேர்வு நடத்தப்பட்டு, ஆசிரியர்கள் பணியாணை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் 410 ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்ற வரும் நிலையில், நேற்று மீண்டும் நடைபெற்ற விசாரணையின்போது, முந்தைய காலத்தில் துவங்கிய தேர்வு நடைமுறையை கைவிட முடியாது என்றும், போட்டித்தேர்வு மூலம் தேர்வு என்று 2018ம் ஆண்டு முடிவை எதிர்வரும் காலத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறையை சாடிய நீதிபதிகள், கடந்த 2014 முதல் 2017ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் கலந்துகொண்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, பணி கிடைக்காமல், 10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.