சண்டிகர்: மாநில முதலமைச்சர்கள் பல்கலைக்கழக வேந்தராக முடியாது  என்று கூறி, பஞ்சாப்  மாநில சட்ட மசோதாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்பு திருப்பி அனுப்பி  உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டிலும் இதுபோன்ற மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதற்கு இதுவரை அனுமதி வழங்காத நிலையில், பஞ்சாப் மாநில அரசு, முதல்வர் பல்கலைக்கழக வேந்ததாக இருக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை குடியரசு தலைவர் திருப்பி அனுப்பி உள்ளார்.

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழங்களில் வேந்தர்களாக அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்களே இடம்பெற்று வருகின்றனர். ஆனால், மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருவதால், ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் தமிழ்நாடு உள்பட பல மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆனால், ஆளுநர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக இருப்பது அரசியல் சாசனத்தின்படி உருவாக்கப்பட்டது.  பல்கலைக்கழங்கள் உருவான காலத்திலிருந்து இதுவே நடைமுறை யாக இருந்து  வருகிறது.

ஆனால்,  சமீப காலமாக மாநில அரசுகளுக்கும் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக செயல்படும் ஆளுநர்களுக்கும் இடையில், தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், ஆளுநர்களை துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கும் வகையில் மாநில அரசுகள் தனிச்சட்ட திருத்தம் இயற்றி வருகின்றன. ஏற்கனவே,  மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பல்கலைக்கழங்களின் வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர்களை நீக்கும் சட்டங்களை இயற்றி   உள்ளன.

. ஆனால், அந்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நிலையில் ஆளுநர்களே இருப்பதால், அவர்கள் அந்த ஒப்புதல் அளிப்பதை தள்ளிப்போட்டுவருகின்றனர். இந்த காரணமாக மாநில அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் இந்த விவகாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.

இதற்கிடையில்,  பஞ்சாபில் பல்கலை. வேந்தர்களாக மாநில முதலமைச்சர் பதவி வகிக்க வகை செய்யும் மசோதாவிற்கு  ஒப்புதல் வழங்க கோரி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்கலைகழகங்களில் முதலமைச்சரே வேந்தர்களாக பதவி வகிக்கும் மசோதா 2023 மற்றும் குருத்துவரா தொடர்பான மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் சட்டசபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே பஞ்சாப் கவர்னராக பன்வாரிலால் புரோஹித்துக்கும் ஆம்ஆத்மி அரசுக்கும்  இருவருக்குமிடையே மோதல் போக்கு  ‘ள்ள நிலையில் மாநிலஅரசின் மசோதாக்களுக்கு  ஒப்புதல் அளிக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த மசோதா குறித்து ஆய்வு நடத்திய குடியரசு தலைவர் திரவுபத முர்மு, அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், மசோதாவை    திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநில முதலமைச்சர் பல்கலைகளின் வேந்தர்களாக இருக்க முடியாது, அதற்கான வழிமுறை  அரசியல் சாசனத்தில்  இல்லை என மசோதா ஜனாதிபதியால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாபில் உள்ள பாபா ஃபரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் விசி நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளுக்கு ஆளுநரின் ஆட்சேபனைக்குப் பிறகு ஆம் ஆத்மி அரசு பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்தம்) மசோதாவை  நிறைவேற்றியது.  மேலும் இரண்டு மசோதாக்களையும் குடியரசு தலைவருக்கு ஆம்ஆத்மி அரசு அனுப்பியது.   இந்த மசோதாக்களை,  கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அனுப்பி இருந்தார். இதில், பல்கலைக்கழக துணைவேந்தர் மசோதா திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.   மற்ற இரண்டு சீக்கிய குருத்வாராக்கள் (திருத்தம்) மசோதா, 2023 மற்றும் பஞ்சாப் போலீஸ் (திருத்தம்) மசோதா 2023 தொடர்பாக ஏற்கனவே உச்சநிதிமன்றத்தை பஞ்சாப் மாநில அரசு நாடிய நிலையில்,  வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநிலஅரசுக்க ஆதரவாக கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.  மேலும், மாநில அரசுக்கு சட்ட மசோதா திருததம் செய்ய உறுதி ள்ளது என்றும்  அரசியலமைப்புச் சட்டப்படி  இந்த மசோதாக்கள் செல்லுபடியாகும் என்று கூறியதுடன்,  இந்த   மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுரை அறிவுறுத்தியது.

நவம்பர் 24 அன்று, உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, முதல்வர் பகவந்த் மான், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு “உடனடி” ஒப்புதல் அளிக்குமாறு கோரி, புரோஹித்துக்கு கடிதம் எழுதினார். . ” அதைத் தொடர்ந்து, கவர்னர் புரோகித் ஒரு மசோதாவுக்கு ஒப்புக்கொண்டார், மற்ற மூன்றையும் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு ஒதுக்கினார். இதில் துணைவேந்தர் மசோதா தற்போது திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.

இந்தியாவில் நூறாண்டுகளுக்கும் மேலாக, ஆளுநர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக அங்கீகரிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். இந்த வழக்கம் பிரிட்டிஷ் இந்தியாவில் துவங்கியது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்கள் துவங்கப்பட்டதிலிருந்தே அந்தந்த மாகாணங்களின் ஆளுநர்களே வேந்தர்களாக இருந்துவந்துள்ளனர். இந்தியா சுதந்திரமடைந்த பிறகும் இந்தப் வழக்கம் தொடர்ந்தது. ஆந்திர மாநிலத்தில் மட்டும் சில ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் முறை இருந்தது. பிறகு மீண்டும் ஆளுநரே பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் வகையில் சட்டம் மாற்றப்பட்டது.

 ஒரு தனி மனிதர் என்ற வகையில்தான் ஆளுநர்கள் பல்கலைக்கழகத்தின் வேந்தர்களாக நியமிக்கப்படுகிறார்கள். வேந்தர்களாகச் செயல்படும் ஆளுநர்கள் பெரும்பாலும், பல்கலைக்கழகங்களின் தினசரி நடவடிக்கைகளிலோ, இயங்கும் முறைகளிலோ தலையிடுவதில்லை. பல்கலைக்கழக நிர்வாகம் துணை வேந்தர்களால் வழிநடத்தப்படுகிறது.

பல்கலைக்கழகங்களில் வேந்தரின் பணி என்பது பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்பது, கௌரவப் பட்டங்கள் அளிப்பதை அங்கீகரிப்பது, குஜராத், பிஹார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்துவது என்ற வகையில்தான் அமைகிறது.