மில்வாகீ

குடியரசுக் கட்சி தனது அமெரிக்க அதிபர் வேட்பாளராக டிரம்ப்பை அறிவித்துள்ளது.

 

வருகிற நவம்பர் 9 ஆம் தேதி அமெரிக்காவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிட உள்ளனர்.

இன்னும் ஒருசில மாதங்களில் தேர்தல் என்பதால் இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தல் அனைத்து மாகாணங்களில் நடைபெற்றல் குடியரசு கட்சியினரிடையே டிரம்புக்கு அதிக ஆதரவு இருந்தது.

ஆகவே இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் போட்டியில் இருந்து விலகினர். தற்போது நிக்கி ஹாலேவும் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகியதால் அந்த கட்சியின் வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

டொனால்ட் டிரம்பை அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிப்பதற்கான குடியரசு கட்சியின் மாநாடு விஸ்கான்சின் மாகாணம் மில்வாகீ நகரில் நடைபெற்றபோது அதிபர் வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.