முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை 12ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
நான்கு மாதங்களுக்கு முன் ப்ரீ வெட்டிங் ஈவென்ட்டுடன் துவங்கிய அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமண நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற மங்கள் உத்சவ் என்ற வரவேற்பு நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
இரண்டு ப்ரீ வெட்டிங் ஈவென்ட்டுகள், திருமணத்திற்கு முன்பான ஹால்தி, மெகந்தி, சங்கீத் உள்ளிட்ட சம்பிரதாய சடங்குகள் மற்றும் திருமணத்திற்குப் பின்னான ஆசீர்வாத் மற்றும் மங்கள் உத்சவ் என ஆசியாவின் நெம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி இல்ல திருமணம் குறித்து உலகமே வியந்தது.
இந்த நிகழ்ச்சியில் கோலிவுட், பாலிவுட் பிரபலங்கள் மட்டுமன்றி ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளின் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சமீப ஆண்டுகளாக இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் வெளிநாடுகளுக்கு சென்று டெஸ்டினேஷன் வெட்டிங் என்ற பெயரில் திருமணங்களை செய்து வரும் நிலையில் ‘வெட் இன் இந்தியா’ என்று இந்தியாவில் திருமண நிகழ்ச்சிகளை செய்ய பிரதமர் மோடி கடந்த ஆண்டு வலியுறுத்தினார்.
இதன் காரணமாக அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சி மூலம் மட்டும் சுமார் ரூ. 5000 கோடி புழக்கத்தில் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் இந்திய திருமணங்களின் செலவினங்கள் வெகுவாக அதிகரித்திருப்பதுடன் சாமானிய மக்களின் திருமண நிகழ்ச்சிகளும் ஈவென்ட்டுகளாக மாறி திருமணச் செலவும் பலமடங்கு உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இந்த திருமணத்தின் மாப்பிள்ளை வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடனத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருமண நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பினார்.