விம்பிள்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் நழுவவிட்டது தனக்கு மனவருத்தம் அளிப்பதாக நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் அல்கரஸ் வெற்றிபெற்றார்.
இதுவரை ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச்சை தொடர்ந்து இரண்டாவது முறையாக வீழ்த்தி அல்கரஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமிதாப்பச்சன் “நேற்றிரவு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாக கொண்டாட்டத்தில் இருந்தார்கள்.
விம்பிள்டன் போட்டியில் அந்நாட்டு வீரர் அல்கரஸ் வென்றது மற்றும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி கோப்பையை வென்றது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், எனக்குப் பிடித்த ஜோகோவிச் தோற்றது எனக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியது” என்று பதிவிட்டுள்ளார்.