சென்னை

டந்த 42 நாட்களில் தமிழகத்தில் 720 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏடிஎஸ் வகை கொடு கட்ப்பதால் ஏற்படக்கூடிய கொடிய நோய் டெங்கு காய்ச்சல் ஆகும்.  ஏடிஎஸ் வகைகொசுக்கள் நன்னீரில் உற்பத்தியாகும். தமிழகத்தில் சமீப காலமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த மே மாதம் 31ஆம் தேதி வரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 4834 ஆக இருந்த நிலையில் கடந்த 42 நாட்களில் 720 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக ஜூலை 12-ஆம் தேதி வரை தமிழகத்தில் 5,554 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் எனவும் பொது சுகாதாரத் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.