ராமேஸ்வரம்

மிழக மீனவர்கள் நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இறால், நண்டு, கணவாய், சங்காயம், காரல் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களுக்கும் விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இவர்க நடுக்கடல் பகுதியில் மீன்பிடிக்க முயன்ற போது அங்கு 5 ரோந்து கப்பல்களை இலங்கை கடற்படையினர் வரிசையாக நிறுத்தி வைத்திருந்ததாக தெரிகிறது. மீனவர்கள் ராமேசுவரத்திற்கும், மண்டபத்திற்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன் பிடித்துவிட்டு நேற்று காலை மிகவும் குறைந்த அளவிலான மீன்களுடன் கரை திரும்பினார்

விசைப்படகு மீனவர்கள் இது குறித்து,

“நாங்க்கள் ஒரு வாரத்துக்கு பிறகு மீன் பிடிக்க சென்று வந்தும் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை. இலங்கை கடற்படையினர் ஏராளமான ரோந்து கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளனர். படகுடன் சிறைபிடித்து சென்று விடுவார்களோ என்று பயந்து, நமது எல்லை பகுதியில் மீன் பிடிக்காமல் திரும்பி வந்துவிட்டோம். இதனால் மிகவும் குறைந்த அளவிலான மீன்கள்தான் கிடைத்தன”

என்று கூறியுள்ளனர்.