சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
”மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் ஜூலை 14 ஆம் தேதியான நாளை, தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதைப்போல் ஜூலை 15 ஆம் தேதி, 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே, நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மிக முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஜூலை 16 ஆம் தேதி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்., ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளளது.’
என்று தெரிவித்துள்ளது.