உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவர் ரோஜர் பெடரர், ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவர் தொடர்ந்து பல ஆண்டுகள் உலகின் நம்பர் ஒன் வீரர் என்ற இடத்தை பிடித்திருந்தார்.

2022ம் ஆண்டு டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்த ரோஜர் பெடரர் அதன் பின் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை தனது குடும்பத்துடன் சென்று கண்டுகளித்து ஓய்வை கொண்டாடி வருகிறார்.

அந்த வகையில் ரோம் நகரில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோல்ட்ப்ளே குழுவினரின் இசை நிகழ்ச்சியைக் காண தனது மகன்கள் மற்றும் குடும்பத்துடன் சென்றுள்ளார்.

கடந்த ஆண்டு இதே கோல்ட்ப்ளே குழுவினருடன் சேர்ந்து மேடையேறி அவர்களுடன் பாடி மகிழ்ந்த ரோஜர் பெடரர் இம்முறை ரசிகராக கேலரியில் அமர்ந்து இசை நிகழ்ச்சியை ரசித்தார்.

https://x.com/federering/status/1812041429746876561

அப்போது பிரபல பாடல் ஒன்றுக்கு எழுந்து நின்று ஆரவாரத்துடன் அந்த பாடலை தனது மகன்களுடன் ரோஜர் பெடரர் பாடி மகிழ்ந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.