டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியா  முப்பை உயர்நீதிமன்ற நீதிபதி  கே.ஆர். ஸ்ரீராம்-ஐ உச்சநீதிமன்ற  கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதுபோல, சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஆர்.மகாதேவனை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக  பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக  இருந்த  கங்காபூர்வாலா  பதவிக்காலம் நாளையுடன் மே 23ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, தற்காலிக பொறுப்பு தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி  மகாதேவன் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். அதையடுத்து அவர் தற்காலிக பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்று பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில்,  சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக,மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி  கே.ஆர். ஸ்ரீராமை நியமிக்கலாம் என கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

அதேவேளையில்,  சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக இருக்கும்,   நீதிபதி ஆர்.மகாதேவனை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் உயர்த்தியுள்ளது.

அவருக்குப் பதிலாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்ததுடன், குடியரசு தலைவர் ஆணை பிறப்பிப்பார்.

புதிய தலைமைநீதிபதி  கே.ஆர். ஸ்ரீராம்

நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மும்பையில் பிறந்தவர்.  அங்குள்ள மும்பை பல்கலைக்கழகத்தில் நிதிக் கணக்கியல் மற்றும் மேலாண்மை மற்றும் எல்எல்பி ஆகியவற்றில் பி காம் முடித்தார், அதைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் அவர் எல்எல்எம் (கடற்படை) தொடர்ந்தார். பிறகு ஜூலை 3, 1986 இல் மகாராஷ்டிரா மற்றும் கோவாவின் பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்து, மூத்த வழக்கறிஞர் எஸ் வெங்கிடேஸ்வரனின் சேம்பர்ஸில் கே.ஆர். ஸ்ரீராம் சேர்ந்தார்.

1997ம் ஆண்டு முதல் சொந்தமாக தாமே வழக்குகளை கையாள தொடங்கினார்.  குறிப்பாக கப்பல் மற்றும் சர்வதேச வர்த்தக சட்டத்தில் நிபுணத்துவத்துடன் வணிக விஷயங்களை கையாண்டார்.

துறைமுகச் சட்டங்கள், சுங்கச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டம், கடல் காப்பீடு (மறு காப்பீடு மற்றும் P&I உட்பட) ஆகியவற்றிலிருந்து எழும் ரிட் விஷயங்கள்; கம்பெனி சட்ட விவகாரங்கள் போன்றவற்றை கையாள்வதில் கைதேர்ந்தவராக திகழ்ந்தார்.

இவர்  கடந்த ஜூன் 21, 2013 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக  நீதிபதி ஸ்ரீராம்  நியமிக்கப்பட்டார். தொடர்ந்து மார்ச் 2, 2016 அன்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக உறுதி செய்யப்பட்டார். இந்த நிலையில் தான், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அந்தஸ்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதுவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள நீதிபதி மகாதேவன்,  1963 ல் சென்னையில் பிறந்தவர், 1989 ல் வழக்கறிஞர் பணியை துவங்கினார். பின்னர் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றவர், கடந்த  2013ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது மூத்த நீதிபதியாக உள்ள ஆர்.மகாதேவன், தற்போது தற்காலிக தலைமை நீதிபதியாக  பணியாற்றி வருகிறார்.