டெல்லி
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இளைஞர்கள் வேலையின்மையால் மன உளைச்சலில் ஆழ்ந்துள்ளதாக கூறி உள்ளார்.
நேற்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் ராகுல் காந்தி,
”ஐ ஐ டி போன்ற மிகவும் கவுரமான கல்வி நிறுவனங்களேபொருளாதார மந்தநிலையின் தீய விளைவுகளை சந்திக்க தொடங்கி உள்ளன. க ஐ ஐ டி வளாக ஆள்தேர்வில் டந்த 2022 ஆம் ஆண்டு 19 சதவீத மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.
அடுத்த ஆண்டு, இந்த எண்ணிக்கை 38 சதவீதமாக, அதாவது இருமடங்காக உயர்ந்தது. இளைஞர்கள் வேலையின்மையால் மனஉளைச்சலில் உள்ளனர். பாஜகவின் கல்விக்கு எதிரான மனப்பான்மையால் அவர்களின் எதிர்காலம் முடங்கி உள்ளது.”
என்று தெரிவித்துள்ளார்.