ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் ஆருத்ரா கோல்டு வழக்கிற்கும் தொடர்பு உள்ளது என்றும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.

ஆருத்ரா கோல்டு வழக்கிற்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் உள்ள தொடர்பு குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “செல்வப்பெருந்தகை ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள செல்வப்பெருந்தகை “என்னை சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்று கூறிய அண்ணாமலை அதை நிரூபிக்க முடியுமா ?” என்று கேள்வியெழுப்பினார்.

அண்ணாமலை தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்தார்.

மேலும், “தமிழக பாஜக-வில் மட்டும் 261 குற்றவாளிகள் உள்ளதாகவும் அவர்கள் மீது 1977 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் உளவுத்துறை அறிக்கை வெளியாகி உள்ளது.

ஆருத்ரா கோல்டு வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி 15 கோடி ரூபாய் கொடுத்து பாஜக-வில் சேர்ந்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். நியாயமான வழியில் ஐபிஎஸ் தேர்வானவர் குற்றவாளியை பக்கத்தில் கூட நெருங்க விட்டிருக்கக்கூடாது.

ஆனால், குற்றவாளிகளின் கூடாரமாக உள்ள தமிழக பாஜக-வுக்கு அண்ணாமலை தலைவராக இருந்துகொண்டு என்னை சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்று கூறியிருக்கிறார்”.

“சரித்திரப்பதிவேடு குற்றவாளி யார் என்று ஒரு சாதாரண கான்ஸ்டபிள் கூட சொல்லிவிடுவார். இதுகூட தெரியாத நீ என்னடா ஐபிஎஸ் படிச்ச ?” என்று அண்ணாமலை குறித்து அப்போது செல்வப்பெருந்தகை ஆவேசமாக பேசினார்.