விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி பயத்தால் போட்டியிடவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி எம் எல் ஏ வாக இருந்த தி.மு.க. வை சேர்ந்த நா.புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார். எனவே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ. தி. மு. க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே. மு. தி. க. ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம்  நிறைவு அடைவதால் வேட்பாளர்கள் தற்போது இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விக்கிரவாண்டி தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தும்பூர் கிராமத்தில்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்பொது,, –

”நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. விக்கிரவாண்டியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். விடியல் பயணம் மூலம் பெண்கள் மாதம் ரூ.1000 சேமித்து வருகின்றனர். புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2.72 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

காலை உணவு திட்டம் மூலம் 17 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 1.16 கோடி பேருக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. வருகிற ஜூலை 10-ந்தேதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்களித்து, 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். விடியல் பயணம் மூலம் பெண்கள் மாதம் ரூ.1000 சேமித்து வருகின்றனர்.புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2.72 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

காலை உணவு திட்டம் மூலம் 17 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 1.16 கோடி பேருக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. வருகிற ஜூலை 10-ந்தேதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்களித்து, 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

நமது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க தேர்தலில் போட்டியிடவில்லை. தொடர் தோல்வி பயத்தால் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக வை பார்த்து மட்டும் பயமில்லை. மக்களை பார்த்தே பயம். அதனால் தான் தேர்தலையே புறக்கணித்து விட்டார். பாஜக-வை பார்த்தும் பயம். அதனால் அவர்களுக்கு வழிவிட்டு போட்டியிடவில்லை”

என்று கூறியுள்ளார்.