விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலி,ன அதிமுக மக்களை கண்டு அஞ்சுகிறது என்று விமர்சித்துடன், பாமகவுக்கு வாக்காளர்கள் இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என கூறினார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் 10ந்தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்றுமாலையுடன் பிரசாரம் ஒய்வு பெறுகிறது. இதனால் அங்கு கடைசிகட்ட அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்டு உள்ள திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா (எ) சிவசண்முகம் அவர்களை ஆதரித்து திருவாமாத்தூர் பகுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது “தமிழ்நாட்டு மக்கள் 40க்கு 40 தொகுதிகளை இந்தியா கூட்டணிக்கு பரிசளித்துள்ளீர்கள். தமிழ் மண்ணில் அடிமை அதிமுக கூட்டத்திற்கும், பாசிச பாஜக கூட்டத்திற்கும் என்றைக்கு இடமில்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக தெரிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்ட பாஜகவோடு இன்று பா.ம.க கூட்டணி வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் எப்படியாவது காலுன்ற வேண்டும், 5 இடமாவது ஜெயிக்கலாம் என்ற பேராசையில் 7 முறை பிரச்சாரம் மேற்கொண்டார் மோடி. கன்னியாக்குமரியில் தவம் செய்தும் பார்த்தார். ஆயிரம் முறை மோடி வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என சொன்னேன். அதனை நிரூபிக்கும் வகையில் நாம் 100% வெற்றியை பெற்றுள்ளோம்
நீட் தேர்வை கொண்டுவந்து, தமிழ்நாட்டு மாணவர்களின் கனவுகளை சிதைக்கும் பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் பா.ம.க-வுக்கு இந்த இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் தோல்வியைத் தான் கொடுப்பார்கள் என்ற அச்சத்தில் தேர்தலில் இருந்து அதிமுக விலகியுள்ளது. திமுகவைக் கண்டு அஞ்சிய அதிமுக, இப்போது தமிழ்நாட்டு மக்களை கண்டும் அஞ்சுகிறது.
நாட்டிலேயே நீட் தேர்வை முதலில் எதிர்த்தது திமுகதான். 7 வருடங்களுக்கு முன்பே போராட்டத்தை தொடங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். ஆனால், இப்போதுதான் நீட் தேர்வு குளறுபடிகளை இந்தியா முழுவதும் புரிந்துக்கொண்டு வருகிறார்கள். வட மாநில தலைவர்களும், மக்களும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள் என்று கூறினார்.
மேலும், அந்த தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசின் திட்ங்களை பட்டியலிட்டார். இந்த விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 8 கோடி முறை இந்த வீடியல் பயணத்தில் பயணம் செய்து உள்ளீர்கள். புதுமைப்பெண் திட்டம் மூலமாக 2 லட்சத்து 72 ஆயிரம் மாணவிகள் மாத மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று பயன் பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் பத்தாயிரம் மாணவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். அதேபோல் காலை உணவு திட்டம் மூலமாக 31,000 அரசு பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். இந்த விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 66,000 மாணவர்கள் தினமும் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகை திட்டம் இதுவரை ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் பயன்ப பெற்று வருகின்றனர். விழுப்புரத்தில் மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரம் பெண்கள் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குறுதிகளை பட்டியலிட்டார்.
- 3 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கெடார் ஊராட்சியில் நடைபெற்று வரும் மாதிரி பள்ளிகள் மற்றும் மாணவர்கள் குடியிருப்பு கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
- விக்கிரவாண்டி ஊராட்சியில் 18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.
- விக்கிரவாண்டி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
- முண்டியம்பாக்கம் முதல் கோசபாளையம் வரை ஒரத்தூர் முதல் முண்டியம்பாக்கம் வரை உயர் மட்ட பாலப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
- அதனுர் வாய்க்காலை தூர்வாரி முடிக்கப்பட்டு நீர் வழித்தடம் விரைவில் சரி செய்யப்படும்.
- மூன்று கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய கானை வட்டார வளர்ச்சி அலுவலகப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
- முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூபாய் 62 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயரமட்ட மேம்பாலங்கள் பணி விரைவில் முடிக்கப்படும்.
- அதேபோல் சாத்தனூர் அணை உபரிநீர் நந்தன் கால்வாயில் தேக்கி வைக்கப்பட்டு விக்கிரவாண்டி தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பனைமலை பேட்டை ஏரியில் சேர்க்கின்ற திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்க உள்ளனர்.
நந்தன் கால்வாய் திட்டப் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அன்னியூர் ஊராட்சியில் வருவாய் ஒன்றரை கோடியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு புதிய காத்திருப்போர் கூட மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. என்னாயிரம் ஊராட்சியில் புதிய கால்நடை மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது. என்னாயிரம் ஊராட்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய இருளர் குடியிருப்பு திறந்து வைக்கப்பட்டுள்ளது. என்னாயிரம் ஊராட்சியில் வேளாண்மை தானியக்கிடங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாம்பழப்பட்டு முதல் மல்லிகை பட்டு வரை ஆகரம் சித்தாம்பூர் முதல் காடை குப்பம் வரை உள்ளிட்ட பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
வீடூர் அணையில் இருந்து குழாய் மூலமாக விக்கிரவாண்டி பேரூராட்சியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி பேரூராட்சியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி பேரூராட்சியில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய வடிகால் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி மக்கள் பயன்பெறும் வகையில் புதிய உழவர் சந்தை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் நீண்ட நாள் கோரிக்கையான நல்லா பாளையம் ஊராட்சியில் மூங்கில் பட்டு வரை 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி பேரூராட்சியில் புதிய மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது.
இது எல்லாம் நமது கழக ஆட்சி அமைந்து 3 ஆண்டுகளில் சிலவற்றை தான் கூறியுள்ளேன் எனக் கூறினார்.