பூரி

டிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் ரத யாத்திரையின் போது கூட்டத்தில் ஒரு பக்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறும். பூரி ஜெகநாதரின் 12 யாத்திரைகளில் ரத யாத்திரை மிகவும் புனிதமானது மற்றும் மிகவும் பிரபலமானதாகும்.

அப்போது மூலவர்களான பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, பூரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

நேற்று மாலை 5.20 மணிகு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ், ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் ஜெகநாதர் தேரின் வடம் பிடித்து இழுத்து ரத யாத்திரையை முறைப்படி தொடங்கி வைத்தனர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் நவீன் பட்நாயக்கும் தரிசனம் செய்தார்.

கூட்ட நெரிசலால் இந்த ரத யாத்திரையில் பங்குபெற்ற பக்தர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். பலர் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக அவர்கள் மீது தண்ணீர் தெளிக்கப்பட்ட போதிலும், பலர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் அங்கு இருந்த ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.