ரியோ கிராண்டி டு கல்
கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பிரேசிலில் 179 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மே மாதம் முதல் பிரேசில் நாட்டில் பருவமழை மிகவும் கடுமையாக பெய்து வருகிறது. அந்நாட்டின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டி டு சுல் நகரில் கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 179 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 33 பேர் மாயமாகியுள்ளதால். அவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel