சென்னை: தமிழ்நாடு அரசு அமல்படுத்தி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், புதிய பயனாளிகளுக்கு வரும் செப்டம்பர் முதல் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
திமுக அரசு அறிவித்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் பெண்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.
இந்த திட்டத்தில் ஏற்கனவே 1.06 கோடி பேர் பயன்பெறுள்ள நிலையில், மேலும், 2.30 லட்சம் பேர் இணைக்கும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு, புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மேலும், இனி இதுவரை விடுபட்ட பெண்களுக்கும் பணம் அனுப்பப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படும். முன்பு முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு இந்த முறை பணம் கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.அதேபோல், முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும் பணம் கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படும். முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படும். புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு பணம் வழங்கப்படும். இதில் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு ரூ.1000 எப்போது கணக்கில் வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
புதிதாக அப்ளை செய்தவர்கள் மற்றும் ஏற்கனவே விடுபட்டவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, ஜூலை 12ம் தேதிக்குள் புதிய பயனாளிகள் பெயர்கள் சேர்க்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, ஜூலை 14ம் தேதி 1 ரூபாய் அனுப்பி வங்கி கணக்கில் சோதனை செய்யப்படும். ஜூலை 15ம் தேதி கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள். அதேபோல் ஆகஸ்ட் மாதமும் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள். அதன்பிறகே பயனர்களுக்கு மாதந்தோறும் பணம் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாம் பூர்த்தி செய்த விண்ணப்பத்திற்கான அத்தாட்சி செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஆக வரும். ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர், இ-சேவை மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.