சென்னை

மிழக ஆளுநர் ஊழல் புகாரில் சிக்கிய சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2011 முதல் சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தராக ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஊழல் குற்றச்சாட்டுகள், விதிமீறல்கள் என அடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காமல் இருக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுப்போம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்

மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. சர்ச்சைக்குள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ஜெகநாதன் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அதையும் மீறி பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வரும் 2025ம் ஆண்டு மே மாதம் வரை ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து பதவிக்கால நீட்டிப்புக்கான உத்தரவை ஜெகநாதன் பெற்றுக் கொண்டுள்ளார்

[youtube-feed feed=1]