வேப்பேரிக்கும் – யானை கவுனிக்கும் இடையே கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலத்தின் இரண்டாவது வழித்தடம் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இதனையடுத்து இந்த மேம்பாலம் விரைவில் முழு அளவிலான வாகன போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் சிதிலமடைந்ததை அடுத்து 2019ம் ஆண்டு இந்த மேம்பாலம் இடிக்கப்பட்டது.
புதிய மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதன் ஒரு பகுதி பணிகள் முடிக்கப்பட்டது வாகன போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.
33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 480 மீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச் சாலையுடன் அமைக்கப்பட்டு வரும் இந்த மேம்பால பணி இன்னும் ஓரிரு நாளில் முழுமையாக நிறைவடையும் நிலையில் உள்ளது.
இதையடுத்து இந்த மேம்பாலம் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது தற்போது வேப்பேரிக்கும் – ஜார்ஜ் டவுனுக்கு இடையே செல்லும் சரக்கு வாகனங்கள், இழுவை வண்டிகள் ஆகியவை பேசின் பாலத்தை சுற்றிக்கொண்டு செல்லும் நிலையில் இந்த மேம்பாலம் திறக்கப்பட உள்ளது மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.