சென்னை: சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஓஎம்ஆர் ஈசிஆர் சாலைகளை இணைக்கும் மேம்பாலம் உள்பட பல்வேறு பாலங்கள்  விரைவில் அமைக்கப்படும் என தமிழ்நாடு  விளம்பரம் நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல்  துறை அமைச்சர்  கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாத்தின்போது பேசிய நகராட்சித்துறை அமைச்சர் கேஎன்.நேரு, ஓஎம்ஆர் ஈசிஆர் இணைப்பு சாலை, தென்சென்னையில் பல்வேறு சிறிய பாலங்கள், கடற்பாசி பூங்காக்கள், சுகாதார நடைபாதை, 24மணி நேர குடிநீர் விநியோகம், சென்னை மாநகராட்சிக்கு புதிய கவுன்சில் மண்டபம் கட்டப்படும் என்பது உள்பட ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில்,கிழக்கு கடற்கரை சாலையையும் (இசிஆர்) பழைய மகாபலிபுரம் சாலையையும் இணைக்கும்  மேம்பாலம் திட்டம்  விரைவில் அமைக்கப்படும் என நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநிலங்களவை யில் அறிவிக்கப்பட்ட நிலையில்,  நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ECR-OMR இணைப்பு விரைவில் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே அவித்தபடி, சென்னை மாநகராட்சி சார்பில் பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே 21 கோடியில் 3 பாலங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.

ஏற்கனவே இந்த சாலைகள் கான்கிரீட்டால் அமைக்க முடிவு செய்த நிலையில், அதற்கு நீர்வழித்துறைஅனுமதி வழங்காததால்,  கான்கிரீட் கட்டமைப்புகளுக்கு பதிலாக இரும்பு பாலங்கள் அமைக்க குடிமை அமைப்பு முடிவு செய்துள்ளது.  மறுபுறம், சாலைகளை இணைக்கும் வகையில் ரோட்டரி பாலம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) முன்மொழிந்துள்ளது.

மொத்தமாக 1000 கோடி செலவில் உருவாக உள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மொத்தமாக சென்னையின் நெருக்கடி குறையும் வாய்ப்பு உள்ளது.. ஓஎம்ஆர், ஈசிஆரில் தற்போது உள்ள ஒன்றரை மணி நேர பயணம் அதிகபட்சம் 20 நிமிடமாக குறையும் என்கிறார்கள்.  இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிழக்கு கடற்கரை சாலையை (ECR) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டுடன் (CPRR) இணைக்கும் பூஞ்சேரியில் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். 1.8 கிமீ நீளம், ₹40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட இணைப்பு வசதி, ECR இல் போக்குவரத்தை குறைக்கவும், நகரத்திற்குள் செல்லாமல் எண்ணூருக்கு வசதியாக பயணிக்கவும் அனுமதிக்கும் என  அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், எண்ணூர் நெடுஞ்சாலையில் ரயில்வே லெவல் கிராசிங் 2ஏயில் ரூ.75 கோடியில் புதிய பாலம் கட்டப்படும்.

தண்டையார்பேட்டை, கடும்பாடி அம்மன் கோயில் தெருவை இணைக்கும் கொடுங்கையூர் கால்வாயின் குறுக்கே உள்ள பழைய பாலமும்,  தமிழர் வீதியில் உள்ள மற்றொரு பாலமும் இடிக்கப்பட்டு முறையே ரூ.8.2 கோடியிலும், ரூ.4.38 கோடியிலும் புதிய பாலங்கள் கட்டப்படும்.

ஈசிஆர்-ஓஎம்ஆர் பாலங்கள் தவிர, எம்கேபி நகர் சென்ட்ரல் அவென்யூ, வெஸ்ட் அவென்யூ, மீனாம்பாள் சாலை, சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு, 6வது பிரதான சாலை மற்றும் பழைய திரு வி கா பாலம், ரிதர்டன் சாலை, ஆர்.ஏ.புரம் இரண்டாவது மெயின் ரோடு, நங்கநல்லூர் 4, 5 ஆகிய இடங்களில் ‘சுகாதார நடைபாதை’ அமைக்கப்படும்.

“சென்னையை அழகுபடுத்தும் ஒரு பகுதியாக, பெசன்ட் நகரில் சுகாதார நடைபாதை உருவாக்கப்பட்டது. இந்த வசதி குடியிருப்பாளர்களிடையே பிரபலமடைந்துள்ளது, ”என்று  கூறிய அமைச்சர் நேரு, ரூ. 15 கோடியில் நகரம் முழுவதும் உள்ள 50 பூங்காக்களில் கடற்பாசி பூங்காக்கள் அமைக்கப்படும் என்றார்.

மேலும், சென்னையில்,  ரூ.10 கோடியில் 14 புதிய பூங்காக்கள் மற்றும் 6 நவீன விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும்,

10 நீர்நிலைகளை ரூ.12.50 கோடியில் புத்துயிர் பெறச் செய்யும்  போன்ற அறிவிப்புகள் மானிய கோரிக்கையில் இடம்பெற்றுள்ளன.

மேலும், நகரின் மக்கள்தொகை அடிப்படையில் கவுன்சிலர்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரிக்கும் என்பதால், 75 கோடியில் கவுன்சில் கூட்டங்களை நடத்த புதிய மண்டபம் கட்டப்படும்,” என்றார்.

 நகரின் விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு 24×7 தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கையில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் ஒரு ஆலோசகரை நியமிக்கும். மேலும், பள்ளிப்பட்டு மற்றும் திருவான்மியூர் நீரேற்று நிலையங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு 24 மணிநேரமும் குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் குழாய்கள் சரி செய்யப்பட்டு மாற்றப்படும்.

100 ஆண்டுகளுக்கும் மேலான கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். என கூறினார்.

முன்னதாக, ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளை இணைக்கும் வகையில் 6 பாலங்களை கட்ட ஏற்கனவே, கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போதும், சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, இளங்கோ நகர் – வெங்கடேசபுரம், வெங்கடேசபுரம் – காந்தி சாலை, வீரமணி சாலை – மணியம்மை சாலை, மணியம்மை சாலை – அம்பேத்கர் சாலை, அண்ணா நகர் – பாண்டியன் சாலை, காந்தி நகர் – பல்லவன் சாலை ஆகிய 6 இடங்களில் ரூ.30 கோடியில் பாலம் கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால்,  நீர்வழி ஆணையம் இதற்கு அனுமதி மறுத்த நிலையில், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும், கடந்த 2022ம் ஆண்டு,   கத்திப்பாரா மேம்பாலம் பாணியில் ஓஎம்ஆர் – இசிஆர் சாலைகளை இணைக்க சுழற்சாலை வகை மேம்பாலம் கட்ட சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்திருந்தது.    இந்த சாலையின் இரு பகுதிகளிலம் ஏராளமான மென் பொருள் நிறுவனங்கள் இருப்பதால், இது சென்னையின் மிக முக்கிய நெஞ்சாலையாக திகழ்கிறது. தென்சென்னை முக்கிய சாலையகளாக உள்ள இசிஆர் மற்றும் ஓஎம்ஆர்   சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. தற்போது மெட்ரோ ரயில் பணிகளும் நடைபெற்று வருவதால், போக்குவரத்து நெரிசலை குறைக்க  சுழற்சாலை வகை மேம்பாலம் கட்ட சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துதிருந்தது.   இதன்படி, ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகருக்கும், ஈஞ்சம்பாக்கத்திற்கும் இடையில் ரூ.180 கோடி செலவில் சுழற்சாலை வகை மேம்பாலம் கட்ட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை எல் அண்ட் டி நிறுவனம் தயார் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.