caesar

ரோமானிய பேரரசர் ஜுலியெஸ் சீசர் நினைவு நாள். கி மு 100 ல் சீசர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். தன்னுடைய 16 வது வயதில் தந்தையை பறிகொடுத்த சீசர், ஆசியா மற்றும் சிலிசியா நாட்டிலுள்ள இராணுவ சேவைக்கு ரோமை விட்டுச்சென்றார்.
சர்வாதிகாரி சுல்லா என்பவர் இறந்த போது, சீசர் ரோமிற்கு திரும்பி வந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு, அவர் தத்துவ ஆய்வுகள் மேற்கொள்ள ரோட்ஸ் சென்றார்.
அவர் பேரரசர் பாம்ப்பேக்கு கீழ் பல அரசு பதவிகள் வகித்தார். கி மு 48 ல், தன் நண்பரான பாம்ப்பேயையே வீழ்த்தினார். கி மு 45 வரை ஆற்றல் மிக்க  சர்வாதிகாரியானார். அவர் வளர்ச்சி பிடிக்காமல், ரோமை முடியாட்சியிலிருந்து காப்பாற்ற, மார்ச் 15 ஆம் தேதி சீசரின் வளர்ப்பு மகன் ப்ருடசின் ஏற்பாட்டால் 23 முறை குத்திக் கொல்லபட்டார்.
சீசர் கூறிய கடைசி வரியான “YOU TOO BRUTUS?” என்ற ஷேக்ஸ்பியரின் நாடக வரி ஒரு அழியாச்சின்னமாகும்.