சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரம் தொடர்பாக பாமக ராமதாஸ், அன்புமணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் சவால் விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 55ஆக உயர்ந்துள்ள நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை செய்தது திமுக பிரமுகர் கண்ணுகுட்டி என்று கூறப்படுகிறது. திமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன்தான் அவர் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்து வந்ததாகவும், அதனால், காவல்துறையினர் அவரை கைது செய்ய தயக்கம் காட்டியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகின.   அதனால், இந்த கள்ளச்சாவு விவகாரத்தில்  தொடர்பு உடைய அந்த பகுதிகளைச்சேர்ந்த  திமுக எம்எல்ஏக்கள்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பாமக, பாஜக வலியுறுத்தி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இன்று,  சட்டப்பேரவை வளாகத்தில் ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்  மற்றும் உதயசூரியன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தெரிந்த உடன் 24 மணிநேரத்தில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.

இந்த விவகாரத்தில், உண்மைக்கு மாறானவற்றை கூறும் ராமதாஸ், அன்புமணி ராமதாசுக்கு கண்டனம் தெரிவித்தவர்கள்,   கள்ளச்சாராயம் குடித்து பலியோனோரின் குடும்பத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் அன்புமணி ராமதாஸ் என்றவர், இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறாமல் அங்கு சென்றும் மலிவான அரசியல் செய்கிறார்  என்று அன்புமணி மீது சாடியவர், *ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம் என்றவர்கள்,

சாராய வியாபாரி கண்ணுக்குட்டி தி.மு.க. பிரமுகர் இல்லை. வீட்டில் தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் கண்ணுக்குட்டி தி.மு.க பிரமுகராகி விடுவாரா?  மக்களவைத் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கட்சி ஸ்டிக்கர்கள் தான் அவரது வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது என்றனர்.

எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்து விலக தயார். அதேபோல் அவர்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவார்களா?  என்றும் கேள்வி எழுப்பினர்.

கள்ளக்குறிச்சியில் ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு