கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சென்னை மதுவிலக்கு எஸ்.பி. செந்தில்குமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் அருண் மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி. பதவியை கூடுதலாக கவனிப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கீழ்ப்பாக்கம் இணை ஆணையர் கோபி சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி. யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் எஸ்.பி செந்தில்குமார் ஆகியோர் காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel