டெல்லி

ஜூலை 3 வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அவர் தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கெஜ்ரிவாலின் மனு மீதான விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போது தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தல் பிரசாரம் முடிந்ததால் கடந்த 2-ம் தேதி மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்றுடன்அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்தது. விசாரணை நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மேலும் இரு வாரங்கள் அதாவது ஜூலை 3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.