கராச்சி
இந்தியாவைப் புகழ்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர் சாகித் அப்ரிடிக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஜாவேத் மியான்தத் இந்தியாவைப்பற்றிய அப்ரிடியின் கருத்து வெட்கக் கேடானது எனக்காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. கொல்கத்தாவில் வந்திறங்கிய அந்த அணித்தலைவர் சாகித் அப்ரிடி “இந்தியாவில் விளையாடும் போது எனக்கு ஏற்படுகிற மகிழ்ச்சி, மற்ற இடங்களை விட மிகவும் அதிகம். நான் என் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் இருக்கிறேன். இந்தியாவில் கிடைக்கும் அன்பை நான் வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பெருமைப்படுவேன். இந்தியாவில் எங்கள் மீது காட்டப்படும் அன்பும் பாசமும், பாகிஸ்தானில் கிடைப்பதை விட அதிகம்” என்று தெரிவித்திருந்தார். அப்ரிடியின் இந்தக் கருத்து வெளியானவுடன் பாகிஸ்தானில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீர்ர்களும் அப்ரிடியின் கருத்துக்கு கடும் விமர்சனம் செய்துள்ளனர். லாகூர் உயர்ந்தீமன்றமும் அப்ரிடிக்கு விளக்கம் கேட்டு அவருடைய வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.தான் கூறிய கருத்து பற்றி 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவைப் புகழ்ந்து தள்ளியிருக்கும் சாகித் அப்ரிடியின் பாசம் வெட்கக்கேடான ஒன்று என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்தத் தெரிவித்துள்ளார்.
அப்ரிடி, மாலிக்கின் கருத்து பற்றி அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஜாவேத் கூறியதாவது, “கடந்த ஐந்து ஆண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இந்தியா என்ன செய்துள்ளது? இந்தியாவில் இருக்கும் போதும் உண்மையை பேச வேண்டும். பாகிஸ்தான் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடியவன் என்ற முறையில் சொல்கிறேன், இந்த வீரர்களின் கருத்துகள் என்னை வேதனைப்படுத்துகிறது. தங்களின் கருத்துகளுக்காக அவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்.இந்தியாவிற்கு பாகிஸ்தான் சென்றுள்ளது கிரிக்கெட் விளையாடத்தான். தேவையில்லாத கருத்துக்களை வெளியிடுவதை வீரர்கள் தவிர்க்க வேண்டும்.” என்று 120 கிரிக்கெட் டெல்ஸ்போட்டிகளில் விளையாடிய மியான்தத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மற்றொரு முன்னணி வீர்ரான சோயிப் மாலிக்கும் இந்தியாவின் பாசத்தைப் பற்றி பெருமையாகச் சொல்லி இருந்தார். இந்த இரு வீர்ர்களின் கருத்து பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இவர்களின் கருத்துக்கு பாகிஸ்தானின் முன்னாள் பயிற்சியாளர் மோசின் கான் ,” இவர்கள் இருவரும் அணியின் மூத்த வீர்ர்கள். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அதுவும் இந்தியாவிற்கு விளையாடச் சென்றிருக்கும்போது ஊடகங்களிடம் மிகுந்த கவனமுமடன் பேசியிருக்க வேண்டும். இவர்களின் கருத்து ஆச்சரியமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.