டெல்லி: நீட் தேர்வில் 0.001%கூட அலட்சியம் இருக்கக்கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம்,  நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

NEET-UG, 2024  தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.  கருணை மதிப்பெண் மற்றும், தேர்வு வினாத்தாள் கசிவு என பல குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு ஏராளமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்வு முடிவை ரத்து செய்ய மறுத்துள்ளதுடன்,  அறிவிக்கப்பட்டபடி கலந்தாய்வு நடத்தவும் அனுமதி வழங்கியது.

இந்த விசாரணையின்போது, கருணை மதிப்பெண் பெற்றவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு மறு தேர்வு நடத்த உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்ததை ஏற்ற உச்சநீதிமன்றம், அதற்கு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் முறைகேடு தொடர்பான வாக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வில் 0.001% அலட்சியம் இருந்தாலும், அதனை முழுமையாக ஆராய வேண்டும்  என மத்தியஅரசு, தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், குழந்தைகள் தேர்வுக்கு தயாராகிவிட்டனர். அவர்களின் உழைப்பை மறக்க முடியாது. மோசடி செய்த ஒரு நபர் ஒரு டாக்டராக மாறுவதை கற்பனை செய்து பாருங்கள். அவர் சமூகத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பவர் ” என மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

மேலும் குற்றச்சாட்டுக்கள், அதாவது  கருணை  மதிப்பெண் முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவுகள்   தொடர்பான மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நோட்டீஸ் மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் மத்தியஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வரும் ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.