சென்னை
தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் அறிய வாட்ஸ்அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது..

ஏற்கனவே தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் மற்றும் யூ டியூப் பக்கங்களில் சேனல்கள் இயங்கி வருகின்றன. தற்போது இதில் வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
“TNDIPR, Govt of Tamilnadu” என்ற பெயரில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் இந்த வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் திட்ட்ங்களை பொது மக்கள் இந்த சேனலின் கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து அரசின் திட்டங்களை வாட்ஸ் அப் சேனல் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel