டெல்லி: நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்யும் வகையில், டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்துள்ளது. கடந்த 2014 மற்றும் கடந்த 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு குறைந்த அளவிலேயே எம்.பி.க்கள் இருந்ததால், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவி இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது அதிக இடங்களை பெற்றுள்ளதால் எதிர்க்கட்சி பதவி காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு, மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளத.
இந்த நிலையில், இன்று புதிதகா தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களின் கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக இன்று காலை 11.30 மணி அளவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் கார்கே தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறத. இதில் மூ த்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட செயற்குழு உறுப்பினர் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். இதில், மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்தும், எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, CWC கூட்டத்தில் தொடக்கவுரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்குப் பங்களித்த இந்தியக் கூட்டணியின் பங்காளிகளை நான் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், எனது கடமையில் நான் தவறிவிடுவேன் என்று கூறினார்.