டெல்லி: போலியான ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

18வது மக்களவைக்கான தேர்தல் முடிவடைந்து ஓரிரு நாளில் மத்திய அரசு பொறுப்பேற்க  உள்ளது. இந்த தேர்தலில், பாஜக தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.

எனவே, 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் (ஜூன் 5) டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மோடி தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை கூட்டணி கட்சி தலைவர்கள் வழங்கினர். இதனையடுத்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (ஜூன் 7) ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பாஜக, தெலுங்கு தேசம், ஜேடியு, ஜேடிஎஸ் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்பிக்களும் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில் மீண்டும் மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைப்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பணியாட்கள் போன்று போலி அடையாள அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில்,  அவர்களில் ஒருவர்  உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவில் வசிக்கும் மோனிஸின் ஆதார் அட்டையை காசிம் ஒருவர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. . பிடிபட்ட மூன்று தொழிலாளர்களில் ஒருவரான மோனிஸும் அதே அடையாள அட்டையைக் காட்டி உள்ளார்.  மூன்றாவது நபரின் அடையாள அட்டை சோயாப் உத்தரபிரதேசத்தில் உள்ள ஹாபூரில் வசிப்பவர் எனக் காட்டியது.

இவர்கள் 3 பேரும், சாதாரண நுழைவு அனுமதிச்சீட்டில் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முற்பட்ட போது மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களின்  அடையாள அட்டை ஒரே எண்ணை காட்டியதால் உஷாரான காவல்துறை யினர் அவர்களை கைது செய்தனர். விசாரணையில், மோனிஸ் மற்றும் கசம் ஆகியோரின் ஆதார் அட்டை தனிப்பட்ட புகைப்படங்களுடன் ஒரே எண்ணைக் காட்டுகிறது. இந்த அட்டைகள் போலியானது போல் தெரிகிறது. மூன்றாவது தொழிலாளியான சோயாப்பின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறது,  அவர்கள் மூன்று பேரும்,  ஒரு ஒப்பந்தக்காரரின் கிழ் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் மே 4 ஆம் தேதி பிற்பகலில் நடந்தது அவர்கள்மீது,  பிரிவு 419 (ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல்), 465 (ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி செய்தல்), 468 (ஏமாற்றும் நோக்கத்திற்காக போலியான ஆவணங்களைப் பயன்படுத்துதல், 471 (மோசடியாக அல்லது நேர்மையற்ற முறையில் ஏதேனும் ஒரு ஆவணம் அல்லது மின்னணுப் பதிவேடு போலியானது எனத் தெரிந்த அல்லது நம்புவதற்குக் காரணம் உள்ளதாகப் பயன்படுத்துதல்) மற்றும் 120 பி (குற்றம் செய்வதற்கான குற்றச் சதி பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே  கடந்த ஆண்டு டிசம்பரில், லோக்சபாவில் சட்டவிரோதமாக நுழைந்து புகைக் குப்பிகளை வீசியதற்காக, மனோரஞ்சன் டி, சாகர் சர்மா, அமோல் தன்ராஜ் ஷிண்டே, நீலம் ரனோலியா, லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவத்  உள்பட சிலரை கைது  விரிவான விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.