டெல்லி: ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என, ரிவர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கும் என பொதுமக்கள் அதிர்ச்சியுடன் எதிர்நோக்கி இருந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு சாமானிய மக்களுக்கு நிமம்மதியை கொடுத்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 2 நாட்களாக நடத்திய நாணய கொள்கை குழு (MPC) கூட்டத்தின் முடிவுகளை இன்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார். இந்த கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக மாற்றாமல் இருக்க நாணய கொள்கை குழு முடிவு செய்துள்ளதாக முடிவு செய்துள்ளது என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.  வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ஏற்கனவே இருந்தபடியே தொடர்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என கருதப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, தொடர்ந்து 8வது முறையாக ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அதன்படி குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 சதவிகிதத்திலேயே தொடரும் என தெரிவித்துள்ளார். பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  இதனால் தனிநபர் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும் என்பதுன் குறிப்பிடத்தக்கது.

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கை குழு (MPC) வட்டி விகிதங்களை மாற்றாமல் பராமரித்துள்ளது. ரெபோ விகிதம் 6.5 சதவீதமாகவும், மார்ஜினல் ஸ்டாண்டிங் ஃபசிலிடி (MSF) விகிதம் 6.75 சதவீதமாகவும், ஸ்டாண்டிங் டெபாசிட் ஃபசிலிடி (SDF) விகிதம் 6.25 சதவீதமாகத் தொடர்கிறது.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தனது உரையில், நாட்டின் உயரும் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகளை வெளியிட்டுள்ளார். 2024-25 நிதிய ஆண்டிற்கான உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) வளர்ச்சி கணிப்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ஆர்பிஐ முன்பு 2025 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டதிலிருந்து 7.2 சதவீதமாக வளர்ச்சி இருக்கும் என தனது மதிப்பீட்டை உயர்த்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

மேலும், காலாண்டு வாரியான மதிப்பீடுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜூன் காலாண்டு – 7.3 சதவீதம் (முன்னர் 7.1%) செப்டம்பர் காலாண்டு – 7.2 சதவீதம் (முன்னர் 6.9%) டிசம்பர் காலாண்டு – 7.3 சதவீதம் (முன்னர் 7.0%) மார்ச் காலாண்டு – 7.2 சதவீதம் (முன்னர் 7.0%) இதேவேளையில் ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கை குழு (MPC) கூட்டத்தின் முடிவில் கவர்னர் சக்திகாந்த தாஸ் 2024-25 நிதிய ஆண்டிற்கான பணவீக்க கணிப்பை ரிசர்வ் வங்கி மாற்றமின்றி 4.5 சதவீதமாகவே வைத்துள்ளது.

காலாண்டு வாரியான கணிப்புகளும் முன்னர் போலவே 4.9%, 3.8%, 4.6%, 4.5% ஆகவே உள்ளன. பணவீக்கம் குறைந்து வரும் போக்கில் இருந்தாலும், உணவுப் பொருட்களின் விலை ஏற்றங்கள் இந்த சரிவு பாதையைப் பெரிய அளவில் தாமதப்படுத்தியுள்ளது என்று கவர்னர் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார். பணவீக்கத்தை நிலையான அடிப்படையில் 4 சதவீதத்திற்குக் கொண்டு வருவதே முக்கிய நோக்கம் என்று கவர்னர் தாஸ் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக சக்தி காந்த தாஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், “நிதிக் கொள்கைக் குழு 4:2 பெரும்பான்மையுடன் பாலிசி ரெப்போ விகிதத்தை 6.5% ஆக தொடர முடிவு செய்தது. இதன் விளைவாக, நிலையான வைப்புத்தொகை வசதி (SDF) விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75% ஆக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டான 2024-2025ல் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி, மொத்தமாக 7.2 சதவிகிதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளதாக சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டின் ஜிடிபி வளர்ச்சி முதல் காலாண்டில் 7.3 சதவிகிதம் ஆகவும், இரண்டாவது காலாண்டில் 7.2 சதவிகிதம் ஆகவும், மூன்றாவது காலாண்டில் 7.3 சதவிகிதம் ஆகவும் மற்றும் நான்காவது காலாண்டில் 7.2 சதவிகிதம் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் வளர்ச்சி:

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தற்காலிக மதிப்பீடுகள் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை, அதாவது 2023-24 ஆம் ஆண்டிற்கான GDP வளர்ச்சியை 8.2% ஆக வைத்துள்ளது . மேலும், “2024-25 ஆம் ஆண்டில், இதுவரை உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் பின்னடைவைத் தக்கவைத்துள்ளன. உள்நாட்டுத் தேவையை வலுப்படுத்தியதன் பின்னணியில் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

ஏப்ரல் 2024 இல் 8 முக்கிய தொழில்கள் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவு செய்தன. கொள்முதல் நிர்வாகக் குறியீடு, அதாவது உற்பத்தித் துறையில் கொள்முதல் நிர்வாகக் குறியீடு மே 2024 இல் தொடர்ந்து வலிமையை வெளிப்படுத்தியது.

கிடைக்கக்கூடிய உயர் அதிர்வெண் குறிகாட்டிகளில் இருந்து தெளிவாகத் தெரிந்தபடி, சேவைத் துறை மிதவையான சூழலை தக்க வைத்துள்ளது. மே 2024 இல் கொள்முதல் நிர்வாகக் குறியீடு சேவைகள் 60.2 ஆக வலுவாக இருந்தன. இது செயல்பாட்டில் தொடர்ச்சியான மற்றும் வலுவான விரிவாக்கத்தைக் குறிக்கிறது” எனவும் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்