மராவதி

னசேனா கட்சித் தலைவரும் பிரபல நடிகருமான பவன் கல்யாண் தாம் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அவரது அண்ணன் சிரஞ்சீவியிடம் ஆசி பெற்றுள்ளார்.

மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

ஆந்திராவில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளிலும், பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும், பா.ஜ.க. 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

பவன் கல்யாண் பித்தாபுரம் சட்டச்சபையில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ளார். முடிவுகள் வெளியான பிறகு பவன் கல்யாண் ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்திற்குச் சென்று அங்கு தனது அண்ணன் சிரஞ்சீவியின் பாதம் தொட்டு ஆசி பெற்றார்.

பிறகு தன் குடும்பத்தினருடன் கேக் வெட்டி தேர்தல் வெற்றியை பவன் கல்யாண் கொண்டாடிய போது நடிகர்கள் ராம் சரண், வருண் தேஜ் ஆகியோரும் உடன் இருந்தனர்.