சரத்குமார் - ராதாரவி
சரத்குமார் – ராதாரவி

 
டிகர் சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து சரத்குமார், ராதாரவி, மற்றும் வாகை சந்திரசேகர் ஆஆயோர் தற்காலிகமாக  நீக்கப்பட்டனர் என்று இன்று மாலை முதல் செய்தி பரவியது.  இதற்கு நடிகர் சங்க தலைவர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்தது. சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நாசர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன.
சரத்குமார் மீதும், அவரது அணியைச் சேர்ந்த ராதாரவி மீதும் பல்வேறுகுற்றச்சாட்டுக்களை நாசர் அணியினர் தெரிவித்தனர். அதில், நடிகர் சங்க இடத்தில் புதிய கட்டிடம் கட்ட அனுமதித்ததும் அடங்கும்.
தேர்தலில் நாசர் அணி வெற்றி பெற்றது. அதிலிருந்தே, சரத்குமார் மற்றும் ராதாரவி மீது கணக்கு வழக்குகளை முறையாக ஒப்படைக்க வில்லை என்று புகார் கூறப்பட்டது. இது குறித்து காவல்துறையிலும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்  இன்று நடிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம் கூடியது. அதில், “சரத்குமார் ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை சங்கத்திலிருந்து நீக்கிவிட்டார்கள்”  என்று செய்தி பரவியது.
இது குறித்து  நடிகர் சங்க தலைவர் நாசரிடம் கேட்டபோது, “இன்று நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதில் முந்தைய நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டு பற்றியும், சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர்  ஆகியோரை நடிகர் சங்கத்தில் இருந்து இடைக்கால நீக்கம்   செய்வது தொடர்பாகவும்  விவாதிக்கப்பட்டது உண்மைதான், அவர்களுக்கு சோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்படும் . அவர்களது பதிலை பொறுத்து தான் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.