டெல்லி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி அளித்த மனு மீது ஜூன் 5 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

கடந்த மார்ச் மாதம் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்,  டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 10-ந்தேதி உயர்நீதிமன்றம் 21 நாட்கள் அவர்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது .

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக இந்த ஜாமீனை வழங்கிய நீதிபதிகள், வருகிற ஜூன் 2-ந் தேதி சரணடைந்து மீண்டும் அவர் சிறை செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.  அவர்இந்த ஜாமீனை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்க கோரி மனுத்தாக்கல் செய்தார்.

கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்ததால்  டெல்லி ரோஸ் அவென்யூ நிதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். நேற்று அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு மீதான விசாரணை நடைபெற்றபோது கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது

நீதிபதி, அவர் மீண்டும் சரண் அடையப் போகிறீரா? என டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் கேள்வி எழுப்பியதற்கு அவர் தமக்கு எந்த நிவாரணமும் நீதிமன்றம் வழங்கவில்லை  என்றால்,  வேறு எந்த வாய்ப்பும் இல்லை.  சரணடைவேன் என கூறினார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை வரும் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சரண்டைய வேண்டும் என நிதிபதி உத்தரவிட்டார்.