டெல்லி: 18வது மக்களவைக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், 11 மணி நிலவரப்படி 26.3% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 ஆகியதேதிகளில் 6 கட்டமாக 485 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இறுதி மற்றும் 7-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி, உத்தர பிரதேசம் 13, பஞ்சாப் 13, மேற்கு வங்கம் 9,பிஹார் 8, ஒடிசா 6, இமாச்சல பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3, சண்டிகர் 1என மொத்தம் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்ட தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) கடந்த மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதுவரை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 486 தொகுதிகளுக்கு 6 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. 7-ஆம் கட்ட வாக்குப்பதிவில் பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளுக்கும், ஹிமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளுக்கும், உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, பிகாரில் 8, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 3, சண்டீகா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிக்கு தோ்தல் நடைபெற்று வருகின்றது. ஒடிஸாவில் மக்களவைத் தோ்தலுடன் பேரவைத் தோ்தலும் நடந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில், காலை 9 மணி நிலவரப்படி 11.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 11 மணி நிலவரப்படி 26.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதனப்டி, பிகார் – 24.25 சதவீதம் சண்டீகர் – 25.03 சதவீதம் ஹிமாச்சல் பிரதேசம் – 31.92 சதவீதம் ஜார்க்கண்ட் – 29.55 சதவீதம் ஒடிசா – 22.64 சதவீதம் பஞ்சாப் 23.91 சதவீதம் உத்தரப் பிரதேசம் 28.02 சதவீதம் மேற்குவங்கம் 28.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இறுதிக்கட்டத் தோ்தலுக்கு பின் ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மக்களவைக்கான இறுதிக்கட்டத் தோ்தல் இன்று நிறைவடைந்ததும், மாலை 6.30 மணிக்குமேல் வாக்குக் கணிப்பு முடிவுகளை வெளியிட தோ்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.