டெல்லி: லோக்சபாவின்  7வது  மற்றும்  இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில்,  காலை 9 மணி நிலவரப்படி 11.31% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

18வது மக்களவைக்கான கடைசி கட்ட தேர்தல் இன்று  8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில்  விறுவிறுப்பாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், காலை 9 மணி நிலவரப்படி, 11.31% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விவரம்:

  1. உத்தர பிரதேசம்- 12.94%
  2. பஞ்சாப்- 9.64%
  3. மேற்கு வங்கம்- 12.63%
  4. பிஹார் – 10.58%
  5. ஒடிசா- 7.69%
  6. இமாச்சல பிரதேசம்- 14.35%
  7. ஜார்க்கண்ட்- 12.15%
  8. சண்டிகர் – 11.64%

உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி 3-வது முறையாக போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில் பாஜக கூட்டணி கட்சியான அப்னா தளம்சார்பில் மத்திய அமைச்சர் அனுபிரியா,மேற்கு வங்கத்தின் டயமண்ட் ஹார்பரில் அபிஷேக் பானர்ஜி (திரிணமூல்), பிஹாரின் பாடலிபுத்ராவில் லாலுமகள் மிசா பார்தி (ஆர்ஜேடி), இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் மாநில அமைச்சர் விக்ரமாதித்யா (காங்கிரஸ்), பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் (பாஜக), ஹமீர்பூரில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் (பாஜக) என 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று மாலையுடன் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைகிறது.

அதைத் தொடர்ந்து, பல்வேறு ஊடகங்கள் சார்பில் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படும். இதன்மூலம் தேர்தல் முடிவுகள் குறித்து ஓரளவுக்கு ஊகிக்க முடியும்.