கன்னியாகுமரி: பிரதமர் மோடி குமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்து வருவது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், பிரதர் மோடி, தியானம் முடித்து கண்ணை திறந்ததும் என்ன நடக்கும்? என்பது குறித்து  மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்  கிண்டலடித்துள்ளார்.

தியானம் முடிந்ததும் பையை எடுத்து கொண்டு போவதை பற்றி யோசிப்பாரா? அல்லது புதிய அரசாங்கத்தை எப்படி சட்டத்தின் விதிகளை மீறி உருவாக்கலாம் என்பதை பற்றி சிந்திப்பாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

18வது மக்களவை தேர்தலுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் 3நாள் தியானம் பேசும்பொருளாக மாறி உள்ளது. அவர் 45மணி நேரம் விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொண்டு வருகிறார். இடையிடையே உணவாக இளநீர், பழச்சாறு மட்டுமே எடுத்து வருகிறார். அவரது தியானத்தை அரசியல் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சனம் சய்து வருகின்றன.

இந்த நிலையில்தான் பிரதமர் மோடியின் தியானத்தில் என்ன நடக்கும்? அவர் தியானம் முடித்து கண்ணை திறந்ததும் என்ன நடக்கும்? என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். அந்த 28 செகண்ட்ஸ்.. மோடி தியானம்.. சினிமா பாணியில் எடுக்கப்பட்ட வீடியோ.. இதை கவனிச்சீங்களா? அதில், 30ம் தேதி தேர்தல் பிரசாரம் முடிந்ததும் மோடியின் கடைசி தேர்தல் பிரச்சார உத்தி இந்த தியானத்தில் இருந்து ஆரம்பமாகும். அங்கே கேமராக்கள் மட்டுமே இருக்கும். 2 ஆயிரம் வீரர்கள் கொண்ட காவல் படை அவரைப் பாதுகாக்கும். அப்பகுதி முழுவதும் மக்கள் நுழையாத வண்ணம் தடுக்கப்படுவார்கள்.

இப்போது கேள்வி என்னவென்றால், தியானம் முடிந்ததும் பையை எடுத்து கொண்டு போவதை பற்றி யோசிப்பாரா? அல்லது புதிய அரசாங்கத்தை எப்படி சட்டத்தின் விதிகளை மீறி உருவாக்கலாம் என்பதை பற்றி சிந்திப்பாரா? என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கிண்டல் செய்துள்ளார்.