பாட்னா: பீகார் மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலையின் தாக்கம் காரணமாக, இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் மாநில அரசு தகவல் வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் வெப்பம் நிலவி வருகிறது. தொடர்ந்து வெப்பக்காற்றும் வீசுவதால், பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது. இதன் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் உள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 46 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்பக் காற்று வீசுகிறது. அதனால் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த நிலையில்,  பீகாரில் வெப்ப அலை தாக்கத்தால் 19 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெப்பத்தின் தாக்கத்தால், அங்குள்ள பள்ளிகளில்  படித்து வரும் மாணவ மாணவிகள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி வழங்கி, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், பெகுசாராய் என்ற இடத்திலும் மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து? , வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் பீகாரில் வெப்ப அலை தாக்கத்தால் 19 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 46 டிகிரி செல்சியசைத் தாண்டி வெப்பம் அதிகரித்துள்ளதால் பலரும் ஹீட் ஸ்ட்ரோக்கால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

கடும் வெயிலுக்கு மத்தியில் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசிய  மாநில அமைச்சர்,  “இன்று வெயில் மிக அதிகமாக உள்ளது, வெயிலின் தாக்கம் எங்களுக்கு சவாலாக உள்ளது. மருத்துவ குழுவினரை உஷார் படுத்தியுள்ளோம். வாக்குச்சாவடி பணியாளர்கள் யாராவது இருந்தால் அல்லது காவல் துறையினர் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர், சிலர் குணமடைந்துள்ளனர், ஆனால் இந்த மூன்று வழக்குகள் துரதிருஷ்டவசமாக இருந்ததால், அவர்கள் காவல் துறையின் குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்வார்கள் , அவர்கள் நகராட்சி மருத்துவமனையில் உள்ள பிரத்யேக வெப்ப அலை வார்டுக்கு கொண்டு வரப்படுவார்கள்.”

மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது, “இது ஒரு சவால், ஆனால் தேர்தலையும் நடத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாக்குச்சாவடி கட்சியினர் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை அனைத்தையும் பின்பற்ற வேண்டும். வெப்ப அலைகள் மற்றும் வெயிலில் இறங்காமல் தேர்தல் பணியை எளிதாக்க முயற்சி செய்யுங்கள்.”

பீகாரின் அவுரங்காபாத்தில், வெப்ப அலை நிலைமைகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஐ எட்டியுள்ளது, மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 40 க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவுரங்காபாத் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பீகாரில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடுமையான வெப்ப அலைகள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தது என்றும் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிர்க்குமாறும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.