சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 2ந்தேதி முதல் வெப்பம் குறையும்  என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வரலாறு காணாத வெப்ப அலை வீசிய நிலையில், கோடை மழை வந்து வெப்பத்தை தணித்தது. இருந்தாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

இதற்கிடையில்,  கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கி உள்ளது.  ஏற்கனவே  கடந்த இரண்டு வாரங்களாக கேரளாவின் பல பகுகிதளில்  கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தற்போது பருவமழையும் தொடங்கி உள்ளதால்,  பெய்து வரும்  தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநில தலைநகரான திருவனந்தபுரம் இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம்,  பத்தனம் திட்டா , ஆலப்புழா , கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர்,  செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வருகிற 2ம் தேதி முதல் வெப்பம் குறையும் என்று தனியார் வானிலை ஆய்வாள‘ரான வெதர்மேன்  பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.  வட தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.