டெல்லி

ரும் 30 ஆம் தேதிக்கு பிறகு வெப்பம் குறைந்து சராசரியை விட கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடெங்கும்ம் கோடை காலத்தின் வெப்பம் அதிகரித்து காணப்படுவதுடன் வடமாநிலங்களில் வெப்ப அலை பரவல் அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொகபத்ரா வெளியிட்ட செய்தியில்,

“தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் 106 சதவீதம் என்ற அளவில் இருக்கும். இது சராசரி மழையை விட 4 சதவீதம் அதிக அளவில் இருக்கும். நாடு முழுவதும் சராசரியை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும்..

லா நினா சூழல் சாதகம் என்ற அடிப்படையில் இந்த கணிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு மற்றும் செப்டம்பருக்கு இடையே இந்த மழைப்பொழிவு அதிக அளவில் இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் மே 30-க்கு பின் வெப்ப அலை குறையும். எனினும், அடுத்த 3 நாட்களுக்கு வடமேற்கு இந்திய பகுதிகளில் கடுமையான வெப்ப அலை இருக்கும்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக டெல்லி மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸிற்கு கூடுதலாக பதிவாகி இருந்ததால், எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.